உலகெங்கும் தமிழ் உறவுகளை நாடி தமிழின் புதிய உதயமாக
.:. மலர்கின்றது இதயநிலா இணையம் .:.
 
கருத்துக்களம் |  முதன்மைப்பக்கம்  |  பதிவிறக்கம்  |  இணைவதற்கு


   வாசகர்வாசல்
    கவிதை
    சிறுகதை
    நகைச்சுவை
    நினைவுகள்

     பக்க வடிவமைப்பு |

  காலை [ Daily updated ]
மாதமலர்
கவிதைகள்
பல்சுவை
முரசொலி
 
 
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
 பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
 -----------

 

[என்றும் அன்புடன்] இயக்குனர்

   ...::: வாசகர் கவிதைகள் ::...
 

பக்கம் II

" உங்கள் மனதில் உதிக்கின்ற உள்ளார்ந்த நம்பிக்கையே புற உலகில் சாதனை வடிவெடுக்கின்றது."

  

காதலில் நனைந்த கவிதைகள்...

நான்
எழுதிய கடிதங்களை
உனக்கு
சேர்க்க முடியவில்லை!

அனுப்புனரும்,
பெறுநரும்,
ஒன்றான பிறகு
யாரிடமிருந்து
யாருக்கு அனுப்ப?  என்னிடமிருந்து எனக்கா?


உன்னிடமிருந்து உனக்கா?
நம்மிடமிருந்து நமக்கா?

என் இதயத்தின் எல்லா தொகுதிகளிலும்
வெற்றி பெற்றுவிட்டாய்,
காதல் பதவியை
என்றைக்கு
ஏற்றுக்கொள்ள போகிறாய்?

குத்துவிளக்கில் ஏன் தீபமேற்றுகிறாய்?
இதய விளக்கில் காதல்
திரியாக திரிகிறது,   உனக்கு தெரிகிறதா?

உன் பயணங்களுக்கு  என்னிடம் விமானமில்லை,
ஆனால் உன்
சிறகுகளுக்கான
வானம்
என்னிடம் இருக்கிறது!

உன் விரல்களுக்கு என்னிடம்  மோதிரமில்லை,
ஆனால் உன்
விரலிடுக்குகளுக்கான
விரல்கள் என்னிடம்தான் இருக்கின்றன!

காதலில் நனைந்த
கவிதைகள் எத்தனை முறை சிலிர்த்தாலும்,
நடுங்கிக்கொண்டுதான்
இருக்கிறது
அணைத்துக்கொள்ள அவளில்லாமல்!

 

கண்ணன் வரிகள்  

 

இலங்கை நேரம்
   
சிந்தனைமுத்து
முதன்மைத்தளம்
தளநிலவரம்
   

    Copyright 2007/2008  ithayanila.com. All rights reserved