|
எல்லாமே நியாயப்படிதான்
நடக்கவேண்டும் என நினைக்கின்ற சிம்மராசிக்காரர்களே. எந்தச் செயலிலும்
மன உறுதியுடனும் துணிவுடனும் செயலாற்றுகின்றீர்கள். நன்பர்களுடன்
பேசுகின்ற போதும் உங்கள் கை ஓங்கி இருப்பதையே விருபம்புகின்றீர்கள்.
பிறருக்கு ஆணையிடுவது என்பது உங்களுக்கு இனிப்பு சாப்பிடுவது போன்றது.
பிறருக்காக தங்கள் சௌகரியங்களை விட்டுக்கொடுக்கக்கூடிய நிறைந்த மனம்
உடையவர்கள் நீங்கள். புகழ்சிக்காக எதையும் செய்து விடும்
இயல்புடையவர்களாக இருக்கின்றீர்கள்.நம்பிக்கைக்கு உரியவர்களாகிய நீங்கள்
சுயகட்டுப்பாடு நிறைந்தவர்கள் பிறருடைய செல்வாக்குக்கு எளிதில்
தலைசாய்த்து விடமாட்டீர்கள்.
மற்றவர்களுக்கு இடையே ஏற்படும் பிணக்குகளை இலகுவில் சென்று தீர்த்து
வைத்து விடுகின்றீர்கள். நீங்கள் எடுத்துக்கொண்ட முடிவினை யாராலு
எப்பாடுபட்டாலும் மறாற்ற முடியாத அளவுக்கு அக்கருத்துடன் ஒன்றித்துப்
போய்விடகின்றீர்கள். இதிலும் சிறப்பாக ஆடி 22 முதல் ஆவணி 1 வரையான
காலப்பகுதியில் பிறந்தவர்கள் எளிதில் கோபம் கொள்பவர்களாகவும் பிறர் மீது
ஆதிக்கம் செலுத்தும் ஆசை அதிகம் கொண்டவர்களாகவம் இருப்பீர்கள். சுய
கட்டுப்பாடு சில வேளைகளில் தளர்ந்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
உங்களுடைய சொந்த விடையங்களில் பிறர் தேவையற்று தலையை நுளைப்பதை சற்றே
விரும்பாதவர்களாள இருக்கின்றீர்கள்.
@
இணைப்பு இதயநிலா அன்பன்... |