|
பிறரை
பார்த்தமாத்திரத்திலையே நம்பிவிடுகின்ற கள்ளம் கபடமற்ற மீனராசி
அன்பர்களே. உங்கள் வாழக்கையில் அலைமோதும் பல பிரச்சினைகளின் மத்தியில்
ஓரு முடிவினை எட்டுவதில் சிக்கல்கள் துரத்திக்கொண்டே இரக்கும். பிறருடன்
நாணயமாக நீங்கள் நடந்து கொள்வது போல் அவர்களும் உங்களுடன் நாணயமாக
நடக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள். அவ்வாறு மற்றையவர்கள் நாணயமாக
நடவாது போய்விடகின்றபோது நீங்கள் இலகுவாக ஏமாற்றவும் படுகின்றீர்கள்.
வாழ்கையினை
கனவு காணுகின்ற நீங்கள் மற்றவருக்கு உதவுவதில் என்றுமே பின்னடிப்பதில்லை.
பிறர் கவனத்தை ஈர்ப்பதில் நீங்கள் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை.
எப்பொழுதும் பின்னணியிலேயே இருந்து விடுகின்றீர்கள். பகற்கனவு காணுவது
என்பது உங்களிடம் சற்று அதிகமே. உங்களிலும் மாசி 20 முதல் பங்குனி 1
வரையான காலப்பகுதியில் பிறந்தவர்கள் குரு மற்றும் சனி என்பனவற்றின்
ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் குரு உங்களை வெளிப்படையாகவும் தாரளமாகவும்
எதிர்காலத்தில் நம்பிக்கை உள்ளவராகவும் இருக்கச்செய்யும்.
ஆனால் சனி அவ்வாறு செய்யமுடியாது காலைப்பிடித்து இழுக்கும். இந்தப்
போராட்டம் உங்களது ஆயுள் முழுவதும் நீடிக்கும். மாசி 2 முதல் 10 க்குள்
பிறந்தவர்கள் எல்லா இடங்களிலும் சகயமாக இருக்கக் கூடியவர்கள் நீங்கள்.
நன்பர்கள் உறவினர்கள் என்று எல்லோருடனும் இனிமையான உறவினைப் பேணுவீர்கள்.
@
இணைப்பு இதயநிலா அன்பன்.... |