உலகெங்கும் தமிழ் உறவுகளை நாடி தமிழின் புதிய உதயமாக
.:. மலர்கின்றது இதயநிலா இணையம் .:.
 
கருத்துக்களம் |  முதன்மைப்பக்கம்  |  பதிவிறக்கம்  |  இணைவதற்கு


   வாசகர்வாசல்
    கவிதை
    சிறுகதை
    நகைச்சுவை
    நினைவுகள்

     பக்க வடிவமைப்பு |

  காலை [ Daily updated ]
மாதமலர்
கவிதைகள்
பல்சுவை
முரசொலி
 
 
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
 பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
 -----------

 

[என்றும் அன்புடன்] இயக்குனர்

   ...::: சொல்லோவியம் ::...

 

சாத்திரங்கள் கூறும் உண்மைகள் மனிதம்; மதம்; மொழி; நாடு கடந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் அவை

 

உள்ளே ஒளிரும் அழகு...        

    த்தனை மனிதர்கள் நிதமும் எம் கண்களில். இப்படியே பிரித்துவிடுவோம். அழகானவர்கள், அழகற்றவர்கள். யார் உண்மையில் அழகுக்கு உரித்தானவர்கள். நெஞ்சில் உரம் கொண்ட ஒரு கதையுடன் இதை விளக்கிவிடுகின்றேன்.         

    உலகம் படைக்கப்படட்டுவிட்டடது. இப்பொழுது இறைவன் ஒவ்வொன்றாக இப்பூமிக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார். எல்லாம் வந்து சேர்ந்துவிட்டது. மீதம் இருந்தது அழகும், அசிங்கமும்தான். இரண்டையும் தனித்தனியாக அனுப்பாமல் ஒன்றாகவே பூமிக்கு அனுப்பிவைத்துவிட்டார் இறைவன். அழகும் அசிங்கமும் பூமிக்கு வந்து சேர்ந்தன. காலைச் சூரியன் ஒளியினை பரப்பி எழுந்துகொண்டிருந்தான். பூமியை வந்தடைந்த களைப்பினை நீக்குவதற்கு ஓர் ஏரியில் நீராடிய பின்பு தமது பணத்தினை தொடரலாம் என இரண்டும் பேசி முடிவெடுத்துக்கொண்டன.

     அழகும் அசிக்கமும் ஏரியில் குழிப்பதற்காக தமது ஆடைகளை கழைத்துவிட்டு ஆற்றில் இறங்கிவிட்டன. சற்று நேரம் குழித்தாகிவிட்டது. அழகு ஆற்றைவிட்டு வெளியே வருவதற்காக அசிங்கத்தை தேடியது. ஆனால் அசிங்கம் அங்கு இல்லை. அசிங்கம் முன்னதாகவே ஆற்றைவிட்டு ஏறி அழகின் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு சென்றுவிட்டது. வேறு வழியில்லை. காலைப்பொழுது புலர்ந்துவிட்டது. மக்கள் நடமாட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது. ஆடையில்லாமல் இனியும் நிற்க முடியாது என்று நினைத்துவிட்டு அழகு அசிங்கத்தின் ஆடைகளை அணிந்து கொண்டு அழகினை தேடி புறப்பட்டுவிட்டது.

 இன்றும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றது அழகு சிக்கியபாடில்லை. அழகின் ஆடையுடன் தன்னை மறைத்துக்கொண்டு அசிங்கம் உலகத்தில் வலம்வருகின்றது.
கதை சிறியதுதான் அர்த்தம் பெரியது பார்த்தீர்களா. எத்தனை மனிதர்கள் தங்கள் சுயங்களை மறைப்பதற்கு தினமும் படும் பாடுகள் நாம் கண்டு கொண்டிருப்பவைதான். உண்மையான அழகு அசிங்கத்தில் தான் இருக்கின்றது. அதன் மனது சுத்தமானது அது அன்பு நிறைந்தது. ஆனால் அழுக்கான வெளித்தோற்றம் கொண்டு இன்று கவனிப்போர் இல்லாது அலைந்துகொண்டிருக்கின்றது.

 

எழுதுவது  இதயநிலா.....

இலங்கை நேரம்
   
சிந்தனைமுத்து
முதன்மைத்தளம்
தளநிலவரம்
   

    Copyright 2007/2008  ithayanila.com. All rights reserved