உலகெங்கும் தமிழ் உறவுகளை நாடி தமிழின் புதிய உதயமாக
.:. மலர்கின்றது இதயநிலா இணையம் .:.
 
கருத்துக்களம் |  முதன்மைப்பக்கம்  |  பதிவிறக்கம்  |  இணைவதற்கு


   வாசகர்வாசல்
    கவிதை
    சிறுகதை
    நகைச்சுவை
    நினைவுகள்

     பக்க வடிவமைப்பு |

  காலை [ Daily updated ]
மாதமலர்
கவிதைகள்
பல்சுவை
முரசொலி
 
 
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
 பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
 -----------

 

[என்றும் அன்புடன்] இயக்குனர்

:::  சிறப்புக் கவிதைகள் :::...
 

பக்கம் I

வட்டமிடும் உன் கனவுகளை வசந்தமென வாரியணைத்திட உன் வாசலெங்கும் கோலமிடுகிறது இதயநிலா....!

 

 

வந்திடுவான் வள்ளல்...

சிந்தனையின் இலக்குகளை செப்பமிட
சிவந்த உன் கரங்களை முத்தமிட
இம்மை பிறவியதன் இருள் அகற்றிட
இறைவன் இவன் என்று உணர்த்திட
வந்திடுவான் வள்ளல் உன் வாழ்வில் ஒருநாள்

இதயமதன் வலியினை சுமந்திட-உன்
இரவுகளை வண்ணமயம் ஆக்கிவிட
வார்த்தையதில் நாணயம் பெருக்கிட
வாழும் உலகினில் நல் வழிதனை உணர்த்திட
வந்திடுவான் வள்ளல் உன்வாழ்வில் ஒருநாள்

உத்தமர்தம் வாழ்வினை உயர்த்திட
உண்மை உலகினை யாவரும் உணர்ந்திட
வித்தகராய் யாவரும் விதியினை வென்றிட
உத்தமனாய் ஒருவன் இருப்பதை உணர்த்திட
வந்திடுவான் வள்ளல் உன்வாழ்வில் ஒருநாள்

நித்தியம் அற்றது நம் வாழ்வு
நிலைதடுமாறுகிறது மனித மனது-அதை
பக்குவ நிலைப்படுத்தி
பந்தங்கள் அறுத்திடவே
வந்திடுவான் வள்ளல் உன்வாழ்வில் ஒருநாள்.

வந்தனம் செய் மனமே-நீ
வள்ளலை கண்டதுண்டோ என்றும்
தருணம் இது பற்றிவிட அவன் பாதங்களை
தயக்கமென்ன இனியும் தாமதம் கலைவாய்.

 

எழுதுவதஎன்றென்றும் அன்புடன் இதயநிலா.....

இலங்கை நேரம்
   
சிந்தனைமுத்து
முதன்மைத்தளம்
தளநிலவரம்
   

    Copyright 2007/2008  ithayanila.com. All rights reserved