|
மாதமலர் |
 |
 |
 |
 |
 |
|
கவிதைகள் |
 |
 |
 |
 |
 |
 |
 |
|
பல்சுவை |
 |
 |
 |
 |
 |
 |
 |
|
முரசொலி |
 |
 |
 |
 |
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
-----------
[என்றும் அன்புடன்] இயக்குனர்
|
|
|
...:::
நாட்டு நடப்பு ::... |
|
|
|
கனவுகள் மடிசுமந்து விடை
தேடும் உள்ளங்களின் குரலாக கரு|கும் இதயங்களின் மீழும்
நினைவுகள். |
|
நிலையற்ற
வாழ்வுடன்....
நெற்றியில் சுரக்கும் வியர்வைத்துளிகளை
தனது சேலைத்தலைப்பினால் துடைத்து விட்டுக்கொண்டு வீதியின்
ஓரமாக இருந்த அம் மரத்தின் நிழலில் உட்கார்ந்து கொண்டாள்
கமலம். தனது சேலை
முடிப்பில் இருந்து கொஞ்சப்பணத்தினை எடுத்து எண்ணும்
முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவளின் கண்களில் அவ்வளியாக
ரோந்தில் வந்த இராணுவத்தினர் கண்களில் பட்டனர். தனது எண்ணும்
பணியினை இடையிலையே கைவிட்டவளாக நிமிர்ந்து அவர்களையே
பார்த்துக்கொண்டிருந்தாள். சற்று நிமிடங்களில் அருகில்
வந்தவர்கள் "ஏ அம்மா இங்க இருக்கக் கூடாது எழும்பி அங்கால போய்
இருங்க." என்ற கட்டளையுடன் விலகிச்சென்றனர். அவசர அவசரமாகவே
அவ்விடத்தில் இருந்து விலகி சற்று தூரத்தில் அமைந்திருந்த
பேரூந்து தரிப்பு நிலையத்தில் மீண்டும் உட்கார்ந்தவள் தனது
காசினை எண்ணும் பணியினை தொடர்ந்தாள்.
அருகில் பேரூந்துக்காக காத்திருந்தவர்கள் தன்னை ஏதோ
பிராணியைப்போல் நோட்டமிடுவதை கண்டுகொண்டவள் அவர்களை
கண்டுகொள்ளவே இல்லை என்றே சொல்லலாம். "ஐயோ இருநூறு ரூபா தானே
சேர்ந்திருக்கு. மிகுதிக்கு என்ன பண்ணுறது...? பொழுதும்
இருட்டிட்டுதே... இனி எங்க போறது....?" அவளுடைய வார்த்தைகளில்
ஏக்கம்,ஏமாற்றம் இரண்டும் கலந்தே இருந்தது. இருந்தாலும் தன்
மகனை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்ற உள்ளுணர்வு அவள்
கால்களுக்கு மீண்டும் தெம்பினை ஊட்டின. அவ்விடத்தினை விட்டு
எழுந்தவள் அருகில் இருந்த கடையில் இருந்தே தனது முயற்சியைத்
தொடர்ந்தாள். "ஐயா தர்மம் பண்ணுங்கையா....ஐயா..." எனறவாறே கடை
வாயின் தூராமாக ஓரத்தில் ஒதுங்கி நிற்கும் கமலத்திற்கு ஒரு
இரண்டு ரூபாவினை தனது கையாளிடம் கொடுத்து அனுப்பி விடுகிறார்
முதலாளி. "நன்றி ஐயா..." என்றவாறே நன்றி கலந்த முகத்துடன்
அப்பகுதியினை விட்டு அடுத்தமைந்த ஒரு வீட்டின் கேட் ஓரமாக
வந்தடைந்தவளை அவ்வீட்டின் நாய் வரவேற்கும் என்பதை அவள் சற்றும்
எதிர்பார்க்கவில்லை.
வீட்டு முற்றத்தில் நின்று குரைக்கும் நாயின் ஆவேச வார்த்தைகள்
கூட அவளை ஒன்றும் செய்யவில்லை என்றே கூறலாம். இப்படியான
சந்தர்ப்பங்களில் அவள் தளரும்போதெல்லாம் தனது காலினை
இளக்கப்போகும் அவளது குழந்தை வினோத்தே அவளது மனத்தினை தூக்கி
நிறுத்திக் கொண்டான்.
நீண்ட நேர நாயின் வரவேற்பு ஓசையின் பின் வீட்டிலிருந்து
விரைவாக வெளிவருகிறார் வீட்டுக்கார அம்மா."என்ன உங்கட தொந்தரவு
தாங்க முடியாது.....நில் வாரன்." தன் பங்கிற்கு எதையோ
எடுப்பதற்காக உள்ளே சென்று திரும்புகிறார் அந்த அம்மா. கையில்
இருந்த ஒரு பத்து ரூபா நோட்டினை கமலத்தின் கையளில்
திணித்தவரின் கண்களில் கமலத்தின் கண்களில் இருந்து வளிந்த
கண்ணீர்த் துளிகளின் சில தனது கைகளை நனைத்திடக் கண்டார்.
இதுவரையில் எத்தனையோ இப்படிப்பட்ட பிச்சைக்காரர்களை அவரும்
கண்டிருக்கிறார். ஆனால் யாரும் இவ்வளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு
அழுபவர்களாக இருந்ததில்லை.
மறுகணமே "ஏனம்மா என்ன உனக்கு நடந்தது...? என்ன பிச்சினை....?"
அதிகாரம் கலந்த ஒரு கருணையான வினாவினை அவ்வம்மையார் கமலத்திடம்
தொடுத்தார்.
இதுவரையில் யாரும் கேட்டிருக்கவும் இல்லை கமலமும் யாருக்கும்
சொல்லியிருக்கவில்லை என்றே சொல்லக்கூடியதான அந்தக் காரணத்தினை
இப்போது சொல்லத்தொடங்கினாள். "அம்மா நாம் பரம்பரைப்
பிச்சைக்காரி இல்லை. போன கிழமைதான் என் மகன் பள்ளிக்கூடம்
விட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருக்கும்போது யாருக்கோ
வைக்கப்பட்ருந்த கிளைமோர் வெடித்ததிலை என் மகனுக்கும் காயம்
பட்டிட்டுது. அவனோட ஒரு காலை எடுக்கணம் என்று பெரிய
ஆஸ்பத்திரியில சொல்லியிருக்க அதுக்கு சில மருந்த நாங்கதான்
வாங்கித்தரணுமாம் அவங்களுக்கு அது வாறதில்லையாம். மருந்துக்கு
மூவாயிரம் தேவை என்டு சொன்னாங்க அவ்வளவு பெரிய தொகை எல்லாம்
நம்மளைப்போன்றவங்களால எப்படி...." வார்த்தைகள்
சலுப்புக்கொட்டிக்கொண்டன. வீட்டுகார அம்மா கேட்பதற்கு எதையுமே
விட்டுவைக்காமல் அனைத்தையுமே சொல்லி முடித்த கமலம் நிமிர்ந்து
பார்த்தாள். தன்முன்னிலையில் நின்றிருந்த அம்மையார் இப்பொழுது
வீட்டில் ஏதோ அவசர அவசரமாக சமையல் வேலையில்
ஈடுபட்டுக்கொண்டிருப்பதை யன்னலின் ஓரமாகக் கண்டுகொண்டாள்.
இப்பொழுதுதான் அவளுக்குப் புரிந்தது தான் கதையினை சொல்ல
ஆரம்பித்ததுமே அம்மையார் வீட்டுக்குள் சென்றுவிட்டார் என்பது.
தன்போன்ற கதியற்றவர்களின் கதையினை கேட்பதற்குத்தான் யாரும்
இல்லையென்றாலும் அதைசொல்வதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கிய
அவ்வம்மையாரை தன்மனமார வாழ்திக்கொண்டே அருகில் இருந்த வீட்டின்
கேட் ஓரமாக ஒதுங்குகின்றாள் கமலம். மீண்டும் அவள் உதடுகளில்
இருந்து " ஐயா...அம்மா....." .
எழுதுவது
என்றென்றும் அன்புடன்
இதயநிலா.....
|
|
|
|
இலங்கை நேரம் |
|
|
சிந்தனைமுத்து |
 |
|
முதன்மைத்தளம் |
 |
|
தளநிலவரம் |
 |
|