|
நித்திய
நினைவுகள்..
காற்றிலும் கலையாத நினைவுகள்
உன் கண்களின் வழியே தொடரும்
என் பார்வைகள்
அத்தனையும் என் இதயத்தில்
இரும்பாய் உறையும் தடங்களாய்
வார்த்தைகளின் இடையே வந்துபோகும்
உணர்ச்சியின் வாசகங்கள்
உயிரினை மிஞ்சும் உச்சத்தில்
உறையும் கனவுகள்

நம் உள்ளங்கள் பகிரத்துடிக்கும்
ஊமை வாசகங்கள்
அத்தனையும் நம் காலடியில்
மறையாத தடங்களாக
மனத்தினை நிரப்பும் நித்திய ஓர்
உறவு மட்டும் மீண்டும்
தொடரும் என் தடங்களில்
மலரும் புதிய நினைவுகளின்
உறைவிடமாய்..

எழுதுவது
என்றென்றும் அன்புடன் இதயநிலா.....
|