உலகெங்கும் தமிழ் உறவுகளை நாடி தமிழின் புதிய உதயமாக
.:. மலர்கின்றது இதயநிலா இணையம் .:.
 
கருத்துக்களம் |  முதன்மைப்பக்கம்  |  பதிவிறக்கம்  |  இணைவதற்கு


   வாசகர்வாசல்
    கவிதை
    சிறுகதை
    நகைச்சுவை
    நினைவுகள்

     பக்க வடிவமைப்பு |

  காலை [ Daily updated ]
மாதமலர்
கவிதைகள்
பல்சுவை
முரசொலி
 
 
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
 பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
 -----------

 

[என்றும் அன்புடன்] இயக்குனர்

   ...::: காதோடு காதாக ::...
 

"உன்னுடைய சுயசிந்தனையினை சாதிப்பதுதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய உளவியல் கண்டு பிடிப்பாகும்"

 

இரகசியம் என்பது எதற்காக...

       பல சமையங்களில் பலவேறு பட்ட மனிதர்களைச் சந்திக்கின்றோம் சிலர் நம்மை நம்பி சில இரகசியங்களை நம்மிடம் சொல்லிவிடுகின்றார்கள். அத்தோடு மட்டும் நின்று விடாது யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூட ஒரு கட்டளையினை இறுதியில் போட்டும் விடுகின்றனர்.

ஒரு வினாடி சிந்தியுங்கள் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்ற அந்த விடையம் தொடர்பாக நான் அதிகளவு பயனைப்பெறமுடியுமா? அல்லது எவரிடமும் சொல்லக்கூடாத விடையத்தை இந்தநபர் என்னிடம் எதற்காக சொல்லவேண்டும்? இப்படிப்பார்த்தால் இரகசியம் என்ற ஒன்று எதற்காக என்று சிந்திக்கத்தோன்றுகின்றது அல்லவா. இப்பொழுது விடையத்திற்கு வருவோம் இரகசியம் என்பது ஒருவர் தான் கூறவந்த விடையத்தை தனக்கு நம்பிக்கையானவரிடம் மட்டும் கூறுவதே இரகசியம் என வைத்துக்கொள்வோம். ஆகவே நமக்குத் வெகு நெருக்கமான ஒருவர் தனது இரசியத்தை நம்மிடம் கூறிவிட்டால் நாம் அதை எமக்கு நெருக்மான ஒருவரிடம் கூறிவிடவேண்டும் என்பது விளக்கமல்ல. சிலவேளைகளில் இவ்வாறுதான் பல இரகசியங்கள் பரப்பப்டுகின்றன. உண்மையில் நீங்கள் கூறவிரும்பும் இரகசியங்களை கேட்கும் நபர் பற்றி நீங்கள் தெளிவாகத் தெரிந்து வைத்திருத்தல் அவசியமாகும் அத்தோடு அந்த நபர் உங்களிடம் தனது இரகசியங்களைக் கூறுபவரா எனவும் கண்காணியுங்கள்.

சிலர் தம் இரகசியங்களை பக்குவமாகப்பேணுவார்கள் மற்றவரிடம் இருந்து ஏதாவது இரகசியங்களைப் எடுக்க முடியுமா என்பதில் தெளிவாக இருப்பார்கள் இவ்வாறனவர்களிடம் இருந்து நாம் வெகு அவதானமாக நடந்து கொள்வது அவசியம். உங்கள் இரகசியங்களின் பெறுமதியினை உங்களை விட அதிகமாக உணர்ந்தவர்கள் யாரும் இவ்வுலகில் இருக்கமாட்டார்கள் என்பதை ஞாபகத்தில் போட்டுக்கொள்ளுங்கள். ஆகவே உங்களுடைய இரகசியங்களின் பெறுமதியினைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அவற்றை என்றும் உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடமே கூறிவையுங்கள்.

எழுதுவத இதயநிலா.....

இலங்கை நேரம்
   
சிந்தனைமுத்து
முதன்மைத்தளம்
தளநிலவரம்
   

    Copyright 2007/2008  ithayanila.com. All rights reserved