உலகெங்கும் தமிழ் உறவுகளை நாடி தமிழின் புதிய உதயமாக
.:. மலர்கின்றது இதயநிலா இணையம் .:.
 
கருத்துக்களம் |  முதன்மைப்பக்கம்  |  பதிவிறக்கம்  |  இணைவதற்கு


   வாசகர்வாசல்
    கவிதை
    சிறுகதை
    நகைச்சுவை
    நினைவுகள்

     பக்க வடிவமைப்பு |

  காலை [ Daily updated ]
மாதமலர்
கவிதைகள்
பல்சுவை
முரசொலி
 
 
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
 பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
 -----------

 

[என்றும் அன்புடன்] இயக்குனர்

   ...::: இறையமுதம் ::...
 

உன்னை நம்புகின்றவர்களுடன் பழகு, நீ யாரை நம்புகின்றாயோ அவர்களுடன் இரு. இதுதான் உன் வாழ்வின் வெற்றிக்கான இரகசியம்.

 

மணுக்குலத்தின் மைந்தன்...

       அடர்ந்த அக் காட்டின் வழியாக நடந்து கொண்டிருந்தான் அர்ச்சுணன். எப்படியாவது பாசுபதத்தினைப் பெற்று துரியோதனனை தோற்கடித்துவிட வேண்டும் என்பதே அவனது அவாவாக இப்பொழுது இருந்தது. கடும் தவம் செய்து பாசுபதத்தினை பெறுவதற்கே அவன் இப்பொழுது சென்று கொண்டிருக்கிறான். வளியில் எதிர்பாராத விதமாக அனுமனை சந்திக்கின்றான் அருச்சுணன். அனுமரோ அருச்சுணன் வந்ததைக் கூட கண்டுக்காமல் தனது அண்ணலாகிய இராமபிரானின் இராம நாமத்தினை இடையறாது உச்சரித்துக்கொண்டிருக்கிறார்.

                  "இராமா... இராமா... இராமா..." என்ற நாமம் அவ்வடர்ந்த காட்டின் அயலெங்கும் காற்றுடன் நாதமிடுகின்றது. அருச்சுணனால் அதற்கு மேல் பொறுக்கமுடியவில்லை. அனுமர் இருந்த இடத்தை வந்தடைந்தான். "யார் நீ எதற்காக இராமா.. இராமா... என இவ்வளவு அலாதிப்பட்டு அலறுகிறாய்...?" என அனுமனை நோக்கி வினாவினைத் தொடுத்தான் அருச்சுணன். அனுமர் இப்பொழுது இராம நாமத்தை உச்சரிப்பதை நிறுத்தினார். "இராமர் என்பது எனது தேவனுடைய நாமம் அவரையே நான் தினமும் அழைக்கிறேன்.. இதில் உங்களுக்கு என்ன சிரமம்?" அனுமரின் விடையுடன் கேள்வியும் வந்தது. "இராமர் என்பது கடவுளா...? என்ன பிதற்றுகிறாய் நான் இதுவரைக்கும் அப்படி ஒரு தெய்வத்தினை கேள்விப்பட்டதே இல்லையே.... நான் தினமும் வணங்கும் கண்ணனை தவிர ஒரு தெய்வம் உண்டோ...? என கண்ணனின் மகிமையினை முன்னிறுத்தி நின்றான் அருச்சுணன். இதில் என்ன ஆச்சரியம் என்றால் இருவருமே நாராயணனின் பக்தர்கள் தான் ஆனால் வேறுவேறு அவதாரங்களில் நாராயணனை துதிக்கின்றவர்கள்.

                   இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியது. "எங்கே உன்னுடைய இறைவனின் பலத்தினை நிரூபிப்பதற்கு நீ இந்தப் பெரிய ஆற்றினைக் கடப்பதற்காக ஒரு பாலத்தினை உன் அம்பினால் அமைத்துக்காட்டு என்றான் அருச்சுணன். அனுமரும் இராம நாமத்தை நெஞ்சில் நிறுத்தி அம்பினை எய்தார். பாலம் அமைந்தது. பாலத்தின் மீது அருச்சுணன் ஏறிக்குதித்தான் பாலம் உறுதியாக இருந்தது. இப்பொழுது அருச்சுணன் பாலம் அமைக்க வேண்டும் தன் திறமையில் அதிகம் நம்பிக்கை கொண்ட அருச்சுணன் வில்லை எடுத்து அம்பு தொடுத்தான். பாலம் உருவானது அனுமர் அதில் தனது ஒரு காலினை ஊன்றியதும் அது உடைந்து நொருங்கியது. அருச்சுணனுக்கு தூக்கிப்போட்டது.

                  இப்பொழுது கண்ணனை நினைத்துப் புலம்ப ஆரம்பித்தான். நாராயணன் அவர்கள் முன் தோன்றினான். அருச்சுணனுக்கு உண்மையை விளக்கியான். அனுமனிடம் அருச்சுண் பற்றியும் அவனின் அறியாமை பற்றியும் எடுத்துக் கூறியவர் அருச்சுணனுக்கு அவன் வந்ததன் நோக்கத்தினை ஞாபகப்படுத்தி அவ்விடத்தினை விட்டு மறைந்தார்.

          நாம் இறைவனை மறந்து செய்கின்ற ஒவ்வொரு செயல்களையும் நம் இறைவன் இரசித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறார். அவை பொய்த்து விடுகின்ற போதுதான் நாம் இறைவனை தேடுகின்றோம் என்பதை அறிந்த இறைவன் நாம் தன்னை பூரண சரணாகதி அடையும் வரை எம்மிடம் வருவதற்குத் தயங்குகிறார். என்று அவனே சரணம் என எம் ஆத்மா அவனிடம் பூரண சரணாகதி அடைகின்றதோ அன்று நம்மை முழுவதுமாக இரட்சிப்பதற்கு அந்த வெங்கடேசன் அவதரிக்கின்றான். உங்கள் மனங்களை அவனிடம் அர்ப்பணியுங்கள் அடைக்கலம் தர வள்ளல் பூமி வரக் காத்திருக்கிறான்.

எழுதுவதஎன்றென்றும் அன்புடன் இதயநிலா.....

இலங்கை நேரம்
   
சிந்தனைமுத்து
முதன்மைத்தளம்
தளநிலவரம்
   

    Copyright 2007/2008  ithayanila.com. All rights reserved