|
யேசுவின் ஆனந்தம்...
உன்னுடைய
கடமையில் இறைவனை நீ காணமுடியும் என்கிறார்கள் பெரியார்கள்.
எப்படி? எனது கடமையை நான் இனங்கண்டு கொள்வது. நீங்கள்
இடைவிடாது உழைத்துக்கொண்டிருக்கின்றீர்கள். அதுவே இறைவன்
விரும்பும் பொருளாகட்டும். உங்கள் உழைப்பின் ஒவ்வொரு
துரும்பிலும் இறைவன் உங்களை நேசிக்கின்றார். அவருடைய பிள்ளைகள்
சுறு
சுறுப்பானவர்கள் என்பதை கண்டு அவர் மகிழ்கின்றார். ஒரு இனிய
கதை ஞாபகத்துக்கு வருகின்றது.
நியூயோர்க் நகரில் இருந்து வத்திக்கான் நகருக்கு ஒரு தொலைபேசி
அழைப்பு வந்தது. நியூயோர்க் நகரத்து பாதர் ஒருவர் அழைப்பில்
அவருடைய குரலில் ஒரே பரபரப்பு,கவலை, பிதற்றல் என இருந்தது.
"ஐயா உடனே நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்,
யேசுகிறிஸ்த்துவைபோல் ஒருவர் சேர்ச்சுக்குள் வந்திருக்கிறார்,
நான்தான் யேசுகிறிஸ்து என்கிறார். நான் என்ன செய்வது?
வத்திக்கானில், போப் ஒருநிமிடம் யோசனை செய்கிறார். பின்னர்
வேறு வேலையாக இருப்பதைப்போல் பாசாங்கு செய்...! என்கிறார்.
வேறு என்னதான் செய்வது. யேசுகிறிஸ்து வந்தால் நீ வேறுவேலை
ஒன்றில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக பாசாங்கு செய்.
உண்மையில் உனக்கு வேலை ஒன்றும் இல்லாவிட்டாலும் நீ ஏதோ செய்வது
போல் அவருக்குக் காட்டிக்கொள். தன்னுடைய மக்கள்
உழைத்தக்கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்து அவர் ஆனந்தம்
அடையட்டும்.
இறைவன் ஒருசமையம் இவ்வுலகில் வந்துவிட்டால் என்னதான் செய்யமுடியும்.
இப்படித்தான் செய்யவேண்டும். ஒருசமயம் ஒரு ஞானி ஒருவர் அமெரிக்காவிற்கு
சென்றிருந்தார். மக்கள் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டது. வரம்
கொடுக்கிறார் என்றால் சும்மாவா. ஒவ்வொருவரும் தமக்கு ஏற்றாற்பேகால்
நின்மதிவேண்டும், சொந்தங்கள் வேண்டும், சொத்துக்கள் வேண்டும் என்று
எல்லாம் கேட்டுப்பெற்றுக்கொண்டிருந்தனர். அமெரிக்கன் ஒருவன் வந்தான்.
குரு கேட்டார். உனக்கு என்ப்பா வேண்டும். அவன் யோசிக்வே இல்லை எனக்கு
டொலர்கள் கொடுங்கள் அதுவே போதும் அது இருந்தால் எல்லாமே என்னை
தேடிவரும், கொஞ்சம் தாமதமாக வந்தாலும் பரவாயில்லை. குருவால் என்ன பண்ண
முடியம்.
எழுதுவது
என்றென்றும் அன்புடன்
இதயநிலா.....
|