உலகெங்கும் தமிழ் உறவுகளை நாடி தமிழின் புதிய உதயமாக
.:. மலர்கின்றது இதயநிலா இணையம் .:.
 
கருத்துக்களம் |  முதன்மைப்பக்கம்  |  பதிவிறக்கம்  |  இணைவதற்கு


   வாசகர்வாசல்
    கவிதை
    சிறுகதை
    நகைச்சுவை
    நினைவுகள்

     பக்க வடிவமைப்பு |

  காலை [ Daily updated ]
மாதமலர்
கவிதைகள்
பல்சுவை
முரசொலி
 
 
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
 பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
 -----------

 

[என்றும் அன்புடன்] இயக்குனர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
:::  ஞானோதையம் :::...
 

" நீ இப்பொழுது செய்த பாவத்திற்காக முதலில் வருந்து உன்னுடைய பழைய பாவங்கள் அனைத்துமே கழுவப்பட்டுவிடும்"

 

நம்மை நேசிப்பவர்...

      உலகில் பாவங்களை நீக்குவதற்கான நம் தேவன் தன் படைப்பின் ஒவ்வொரு முக்கியத்துவத்தினையும் நமக்காக செலவிடுபவராக அவதரித்தவர். அவரை மறந்து நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம் இறைவன் நம்மை இரட்சிப்பவராகின்றார். பல வேளைகளில் நாம் அவரை மறப்பினும் நம்மை என்றும் மறக்காதவரான தேவன் நமக்காகவே பாடுபடுபவராகின்றார்.

             ஒரு கஞ்சன் இருந்தான் அவனுக்கு நெடு நாளாக ஒரு வருத்தம் இருந்துவந்தது. காதில் இரைச்சல் கண்களில் வலி பல டாக்டர்களிடம் காட்டினான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வைத்தியம் செய்தனர். ஒருவர் ஆப்பிரேசன் செய்ய வேண்டும் என்றார். இன்னொருவர் பற்களில் அரைவாசியை கழற்ற வேண்டும் என்றார்.மற்றவர் வால்வை அகற்ற வேண்டும் என்றார் எல்லாம் செய்யப்பட்டது ஆயினும் வருத்தம் நின்றபாடில்லை. பின்னர் கடைசியாக பெரிய ஒரு வைத்தியரிடம் தன்னைச் சென்று காட்டினான் இந்தக் கஞ்சன் அவரோ " தம்பி இனி உனக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை நீ இன்னும் ஆறு மாதங்கள் தான் உயிருடன் இருப்பாய் அதற்குள் நல்லபடியாய் வாழ்ந்துவிட்டுப்போ..." என்றார். அவனும் அன்றிலிருந்து பல சொகுசான வாழ்க்கையை ஆரம்பித்தான் தன்னுடைய பணத்தைக்கொண்டு ஒரு பெரிய வீடு கட்டினான் பல வர்ண ஆடைகளை வாங்கி உடுத்தினான்.

             ஒரு சமயம் தனக்கு ஒரு ஆடை தைப்பதற்காக தையல்கடை ஒன்றிற்குச் சென்றான். அங்கே ஆடை தைப்பதற்கு அளவு எடுக்கப்பட்டது. தையல் கடைக்காரன் இவனிடம் உங்கள் அளவு 16 இதற்குத் தைக்கட்டுமா என்றான். "இல்லையே என்னோட அளவு 14 தானே அந்த அளவிற்குத்தான் நான் தைத்துவருகிறேன்" என்றான். பரவாயில்லை அந்த அளவிற்குத்தைத்தால் காதில் இரைச்சல் கண்களில் வலி என்பன ஏற்படும் பரவாயில்லையா? என்றான். இப்பொழுது கஞ்சன் சிந்திக்க ஆரம்பித்தான் தனக்கு இவ்வளவு காலமும் இருந்து வரும் நேய்க்கான காரணத்தினை அவன் இப்பொழுது புரிந்து கொண்டான்.

          இப்படித்தான் நம்மில் பலர் எத்தனையோ விடையங்களை சரிசெய்வதற்காக யார் யாரையோ எல்லாம் அணுகுகின்றோம் என்ன என்னவோ எல்லாம் செய்கின்றோம் ஆனால் நாம் நாடவேண்டிய உண்மையானவரை என்றும் மறந்து விடுகின்றோம். உண்மையான அவர் நம்மை நேசிப்பவராகவும் நம் தேவையை உணர்ந்தவராகவும் இருக்கின்றார். இவ்வுலக ஜீவராசிகளை இரட்சிப்பவரான அவர் இயேசுவாக அவதரித்திருக்கிறார்.

எழுதுவதஎன்றென்றும் அன்புடன் இதயநிலா.....

இலங்கை நேரம்
   
சிந்தனைமுத்து
முதன்மைத்தளம்
தளநிலவரம்
   

    Copyright 2007/2008  ithayanila.com. All rights reserved